‘Zero chance’ கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகளில் வெற்றிகளைத் தமதாக்கிக்கொண்ட எமது பாடசாலை மாணவர்கள்
‘ஏமாறாது இருப்போம் நேர்வழி செல்வோம்’ என்ற செயற்றிட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ‘zero chance’ கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகளிலே வெற்றி பெற்று எமது பாடசாலை மாணவர்கள் சாதனை படைத்துள்ளார்கள். அவுஸ்திரேலியா அரசாங்கம் மற்றும் கல்வி அமைச்சு இணைந்து நடாத்திய இப்போட்டியானது அகில இலங்கை ரீதியாக, தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளிலே அதாவது, சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்குப் பயணிக்கும் அபாயத்திற்கு முகங்கொடுத்துள்ளவர்கள் அதிகளவில் வசிக்கும் பிரதேசங்களிலே அமைந்துள்ள பாட சாலைகளிலே இரு வயதுப் பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றன. இதற்காக 2932 கட்டுரைகளும் ஓவியங்களும் சமர்ப்பிக்கப்பட்டன. இதிலிருந்து 199 வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான பரிசளிப்பு விழாவானது 15-11-2025 சனிக்கிழமை கொழும்பு பண்டாரநாயக்கா சர்வ தேச மாநாட்டு மண்டபத்திலே நடைபெற்றது. அந்தவகையிலே இவ்விழாவிலே எமது மாணவர்கள் கலந்து கொண்டு சான்றிதழ்களையும் புலமைப்பரிசில்களையும் பெற்றுக்கொண்டனர்.
S. டேனுஷா – கட்டுரைப் போட்டி – தரம் 11 – முதலாமிடம்
R. தனுஜா – கட்டுரைப் போட்டி – தரம் 12 – முதலாமிடம்
P. சாலினி – கட்டுரைப் போட்டி – தரம் 13 – இரண்டாமிடம்
M. ஸ்ரீபிரமோதேனு – கட்டுரைப் போட்டி – தரம் 10 – மூன்றாமிடம்
T. சந்தோஸ் – சித்திரப் போட்டி – தரம் 11 – முதலாமிடம்
M. யோகிதா – சித்திரப் போட்டி – தரம் 13 – முதலாமிடம்
G. தர்சன் – சித்திரப் போட்டி – தரம் 12 – இரண்டாமிடம்
F. நிலக்சன் – சித்திரப் போட்டி – தரம் 10 – இரண்டாமிடம்
B. சுபிநாத் – சித்திரப் போட்டி – தரம் 11 – மூன்றாமிடம்
N. டயனிகா – சித்திரப் போட்டி – தரம் 13 – மூன்றாமிடம்










