மாகாணமட்ட விளையாட்டுப்போட்டி – 2025
2025 ஆம் ஆண்டிற்கான மாகாண மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுநர் போட்டி
யாழ் துரையப்பா மைதானத்தில்16/8-20/8 வரை நடை பெற்றது
இதில் எமது பாடசாலை மாணவர்களில்,
இ. டர்சியா 16 வயது பெண்கள் பிரிவில் 200m போட்டியில் வெள்ளி பதக்கம் மற்றும் போட்டி சாதனையையும் 100m போட்டியில் வெள்ளி பதக்கமும் பெற்றுள்ளார்.
ச. ரக்சனா 16 வயது பெண்கள் பிரிவில் 800m போட்டியில் தங்கம் பதக்கம் மற்றும் போட்டி சாதனையையும் 400m போட்டியில் தங்க பதக்கமும் 300m தடை தாண்டல் போட்டியில் 4 இடத்தினையும் பெற்றுள்ளார்.
ச.ரக்சனா, இ.டர்சியா, ச.லக்சனா, S.கனிஸ்ரா ஆகிய மாணவிகள் 16 வயது பெண்கள் பிரிவில் 4×100m அஞ்சல் ஓட்ட போட்டியில் வெள்ளி பதக்கம் மற்றும் 4×400m அஞ்சல் ஓட்ட போட்டியில் தங்கம் மற்றும் போட்டி சாதனையையும் பெற்றுள்ளனர்.
கி. சுபிஸ்கரன் 20 வயது ஆண்கள் பிரிவில் தட்டு எறிதலில் வெள்ளி பதக்கம் பெற்றுள்ளார்.
ந. கனிஸ்கர் 12 வயது ஆண்கள் பிரிவில் 60m போட்டியில் 4 ஆம் இடத்தினை பெற்றுள்ளார்.













