ராகம்: ஹம்சத்வனி தாளம்: சதுஸ்ரஏகம்
நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயம் வழி
வழுத்தியே நாம் வாழ்த்துவோம் காலையும் மாலையும்
வழுத்தியே நாம் வாழ்த்துவோம்
ஒழுக்கநெறி கலைகள் கல்வி நாட்டுவாள்
பழுத்த செந்தமிழ் பழச்சுவையூட்டுவாள்
(நெளுக்குளம்...)
சைவம் கிறிஸ்தவம் இஸ்லாமிய மார்க்கம்
வையகம் தனில் அவள் நமக்குரைத்து
தெய்வ நெறியில் எமை திசை காட்டுவாள்
மேன்மை வழியில் எமக்கறிவூட்டுவாள்
(நெளுக்குளம்...)
அதிபர் ஆசிரியர் பணிந்திடுவோம் - அவர்
அதியன்புடன் தரும் கலை பயில்வோம்
மதி நிறை மாணவராய் திகழ்ந்திடுவோம் - அன்னை
மலரடி தினம் நாம் துதித்திடுவோம்.
(நெளுக்குளம்...)
வாழ்க கலைமள் வித்தியாலயம் - வாழ்
கல்விமெழு நெளுக்குளமும்
வாழிய செந்தமிழ்ப் பண்பாடு - என்றும்
வாழ்த்துவோம் செந்தமிழ்ப் பண்பாடு
( நெளுக்குளம்...)








