பரிசளிப்பு விழா – 2025

2025ம் ஆண்டிற்கான பரிசளிப்பு நிகழ்வு 06.11.2025 அன்று பாடசாலையில் நடைபெற்றது. எமது பாடசாலை அதிபர் திரு.இ.தமிழழகன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக திரு.சு.அமிர்தலிங்கம் (ஓய்வுநிலை பிரதிக் கல்விப் பணிப்பாளர் – கல்வி அபிவிருத்தி, வலயக்கல்வி அலுவலகம், வவுனியா தெற்கு) அவர்களும், சிறப்பு விருந்தினராக திரு.S.விஜயகாந்தன் (ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகர், வலயக்கல்வி அலுவலகம், வவுனியா தெற்கு) அவர்களும், கௌரவ விருந்தினர்களாக திருமதி.வா.ஸ்ரீதரன் (ஆசிரியர் – வ/பூவரசு ஆரம்பப் பாடசாலை), திருமதி.ப.கல்யாணகுமார் (பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர்), திரு.A.வினோதன் (பாடசாலை பழைய மாணவர் சங்க செயலாளர்) ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில் ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டது. பல்வேறு போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டிய மாணவர்களுக்கும் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

Our School
Contact us
Location